பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்
பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்.
மும்பை,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல் வருகிற 28-ந்தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகளை ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, பிரசார வியூகங்கள் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே பீகார் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் பீகார் சென்று, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

Related Tags :
Next Story