திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் போராட்டம்
திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளது.
திருபுவனை,
திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் நூற்பாலை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி. (பி.எம்.சி.) தலைவர் எல்லப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மஞ்சினி, பொருளாளர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, நூற்பாலை தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய 2 வருட போனஸ், 8 மாத சம்பளத்தை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story