புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி கலெக்டர் அருண் அறிவிப்பு
புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப் படுவதாகவும், கடற்கரை இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்றும் மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திரையரங்குகளுக்கு அனுமதி
புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய வகுப்புகள் 5-ந்தேதி முதலும், 9, 11-ம் வகுப்புகள் 12-ந்தேதி முதலும் தொடங்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் நீச்சல் குளங்கள், பூங்காக்களை 15-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கலாம்.
கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் 100 நபர்கள் வரை கல்வி, விளையாட்டு, பொழுதுப்போக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கடற்கரை
ஓட்டல்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 10 மணி வரை பார்சல் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். புதுச்சேரி கடற்கரை இரவு 9 மணி வரை மக்கள் நடைபயிற்சிக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story