சுதேசி, பாரதி மில்களை மூட உத்தரவிட்டது கவர்னர் தான் நாராயணசாமி குற்றச்சாட்டு
சுதேசி, பாரதி மில்களை மூட உத்தரவிட்டது கவர்னர் கிரண்பெடி தான் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கவும், தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்யவும் காலதாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக மின்துறை, நகர அமைப்பு குழுமத்தின் அனுமதி, கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் வியாபார உரிமம் பெற கால தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனை குறுகிய காலத்தில் செய்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
தொழில்துறை, உள்ளாட்சித்துறை, நகர அமைப்பு குழுமம், மின்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைப்பதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை தொழில்துறை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் புதுவையில் புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் போர்டல் மூலமாக நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவே இந்த அனுமதியை பெற முடியும். இதற்காக அலுவலகங்களுக்கு வரத் தேவையில்லை.
மில் தொழிலாளர் பிரச்சினை
ரோடியர், பாரதி, சுதேசி மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் குறித்து அறிவிப்பதற்கான கோப்புகளை கவர்னர் ஏற்கவில்லை. அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி தீர்வு காண வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் கவர்னர் மில்களை மூட உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 2019-20 ரோடியர் மில் தொழிலாளர் களுக்கு பாதி சம்பளம் கொடுப்பதற்காக ரூ.24 கோடி ஒதுக்கினோம். அதிகப்படியான தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று அந்த சம்பளத்தை தராமல் கவர்னர் தடுத்து நிறுத்தினார். பட்டானூர் நிலத்தை விற்று அதன் மூலம் வரும் வருவாயை வைத்து தொழிலாளர்களுக்கு நிதி கொடுப்பது என்று முடிவு செய்தோம். அந்த நிலத்தை ஜிப்மர் நிர்வாகம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என்று கவர்னர் கூறியுள்ளார். அந்த நிலத்தை ஜிப்மர் எப்போது வாங்கும் என்பது தெரியாது. எனவே வங்கிகள் மூலம் கடன் பெற்று தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை கொடுப்பதா? அல்லது மாற்று ஏற்பாடு செய்வதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
மில்களை மூடியது கவர்னர்
சுதேசி, பாரதி மில்களில் தற்போது 200 தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் ரூ.14 கோடியே 44 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் 2 மாத சம்பளமாக ரூ.1 கோடியே 44 லட்சத்திற்கு கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால், அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் 2 மில்களையும் மூட வேண்டும் என துறைக்கு அனுப்பினார்.
இது எங்களது கவனத்துக்கு வந்ததும் நானும், அமைச்சர் ஷாஜகானும் கவர்னரிடம் தெளிவாக விளக்கி கூறினோம். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகளை மிரட்டி மில்களை மூட உத்தரவிட்டது கவர்னர் தான்.
மக்களுக்கு நன்மை செய்வதை விடுத்து புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்துவதற்கு கவர்னர் தேவையா? மாநில வளர்ச்சிக்கு கவர்னரின் பங்கு என்ன? மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தொழிலாளர்கள், அரசுக்கு விரோதமாக இருக்க வேண்டும், களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறார்.
விரைவில் முடிவு
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி கோப்பு அனுப்பினால் அதை திருப்பி அனுப்புகிறார். அதேபோல் பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களின் மதுபார்களை ஏலம் விட்டு, அந்த தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கும் நடவடிக்கைக்கும் அனுமதி தராமல் காலம் கடத்துகிறார். வெகு விரைவில் இதற்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன். தொழிலாளர்களுக்கு இடைக்காலமாக நிதியுதவி செய்ய நானும், அமைச்சர் ஷாஜகானும் அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story