நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 4:39 AM IST (Updated: 1 Oct 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை சிறையில் அடைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை சிறையில் அடைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, சையது அகமது சலபி, செயலாளர்கள் பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், பொருளாளர் ஆரிப் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். நெல்லை மாவட்ட தலைவர் கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story