தென்காசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தென்காசி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தென்காசி வல்லகுளம், ஆய்க்குடி அருகே புங்கன்குளம் பகுதிகளில் மண் கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேல மெஞ்ஞானபுரம் விவசாயி யாகப்பனுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு பாதை இல்லாமல் தடுத்து நிறுத்தியதை மாவட்ட கலெக்டருக்கு புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் பிச்சையா, ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சுடலை, வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் முடித்து வைத்தார்.

Related Tags :
Next Story