பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரு.வி.க. நகர்,
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இதை கண்டித்து சென்னை திரு.வி.க. நகர் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் ஓட்டேரி தாசாமகான் பகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி தலைவர் அப்துல்கபூர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் கொளத்தூர் தொகுதி சார்பில் பெரம்பூர் காந்தி சிலை அருகே கொளத்தூர் தொகுதி தலைவர் கவுஸ்பாஷா தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுசெயலாளர் தமீம் அன்சாரி, தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல்காசிம், வேளச்சேரி தொகுதி செயலாளர் அன்சாரி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story