எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:43 AM IST (Updated: 1 Oct 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இதை கண்டித்து காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் ஜாபர் செரீப் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் ஹாஜி தஸ்தகீர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story