மீஞ்சூர் அருகே இறால் பண்ணை ஊழியர்கள்-வடமாநில தொழிலாளர்கள் மோதல்
மீஞ்சூர் அருகே இறால் பண்ணை ஊழியர்கள்-வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே இரு இடங்களில் தனியாக குடியிருப்புகள் அமைத்து அனைவரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை அருகே இறால் பண்ணை தொழிலாளர்கள் 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். வடமாநில தொழிலாளர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கற்களால் தாக்கியுள்ளனர். இதையடுத்து இறால் பண்ணை தொழிலாளர்கள் தனது நண்பர்களுடன் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். குடியிருப்பின் ஜன்னலை அடித்து நொறுக்கினர்.
அங்கு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து வடமாநில தொழிலாளர்களை தாக்கினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். சத்தம் கேட்கவே அங்கு இருந்த வட மாநில தொழிலாளர்கள் வெளியே வந்த நிலையில் குடியிருப்பு காவலாளிகள் இறால் பண்ணை தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் காவலாளிகளை துரத்தினர். குடியிருப்பு உணவு விடுதி பணியாளர்களின் 4 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. காவலாளி அறையை சேதப்படுத்தினர். உதவி காவலாளி அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை வடமாநில தொழிலாளர்கள் கல் வீசி தாக்கினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் கல்பனாதத், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஒரே இடத்தில் குடியிருப்பு அமைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story