சுங்க கட்டண உயர்வை கண்டித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சுங்க கட்டண உயர்வை கண்டித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2020 2:13 AM IST (Updated: 2 Oct 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசு கூடுதலாக விதித்து உள்ள சுங்க கட்டணத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மும்பையின் அனைத்து நுழைவு வாயில் வழியாக வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் நவிமும்பை ஐரோலி சுங்கச்சாவடி அருகே திரண்டனர். பின்னர் மாநில அரசு கூடுதலாக விதித்து உள்ள சுங்க கட்டணத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனா கட்சியினரை பிடித்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story