பெங்களூருவில் கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது 40 கிலோ கஞ்சா-ஆட்டோ பறிமுதல்
பெங்களூருவில் கஞ்சா விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மல்லேசுவரம் ரெயில் நிலையம் அருகே வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வழி மறித்து போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அந்த ஆட்டோவில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்களது பெயர்கள் கார்த்திக் (வயது 31), விக்கி (23), பிரேம்குமார் (21) என்று தெரியவந்தது. கார்த்திக் ஒர்க்ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே இவர் கடந்த 2019-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ராஜாஜிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
40 கிலோ கஞ்சா
இதுபோல பிரேம்குமார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. கார்த்திக்குடன் சேர்ந்து பிரேம்குமார், விக்கி ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 3 பேர் மீதும் ஸ்ரீராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story