பாளையங்கோட்டையில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை,
பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், விவசாயிகளை பாதிக்கிற வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தச்சை மாடத்தி தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை தொகுதி துணை செயலாளர் ராஜா, நெல்லை தொகுதி செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் வள்ளுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story