மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராமகோபாலன் உருவப்படத்துக்கு அஞ்சலி + "||" + Tributes to the portrait of Ramagopalan at various places in Nellai district

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராமகோபாலன் உருவப்படத்துக்கு அஞ்சலி

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராமகோபாலன் உருவப்படத்துக்கு அஞ்சலி
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராமகோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெல்லை,

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவையொட்டி நெல்லையில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை டவுனில் இந்து முன்னணி, இந்து மகா சபா, விசுவ இந்து பரிஷத், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் ராமகோபாலன் படத்துக்கு மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர், செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஆறுமுகக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு முக்கில் ராமகோபாலன் படத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் உடையார், நிர்வாகிகள் கணேசன், பரமசிவன், காளிசாமி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவையொட்டி, கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கமலா, மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் மூர்த்தி, மண்டல தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி நகர தலைவர் ராமசாமி, செயலாளர் சுடலை, ஒன்றிய தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் படத்துக்கு பா.ஜ.க. அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பண்டியன், மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் நகர இந்து முன்னணி சார்பாக, நகர தலைவர் முருகன் தலைமையில், ராமகோபாலன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இட்டமொழி பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிர்வாகி ஆர்தர், பா.ஜனதா நிர்வாகிகள் ரவிக்குமார், பட்டுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராமகோபாலன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இட்டமொழி புதூரிலும் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேரன்மாதேவி-வள்ளியூர்

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் ராமநாதன், நகர செயலாளர்கள் செல்வராஜ், மாரியப்பன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் நாலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே, அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் உருவப்படத்திற்கு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரிக்குழைக்காதர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோட்ட தலைவர் தங்க மனோகர், மாவட்ட தலைவர் ஹரி சுடலைமுத்து, இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பரமசிவம், பா.ஜனதா மாவட்ட செயலாளர் குமார முருகேசன், வக்கீல் பிரிவு செயலாளர் ராம்நாத், வள்ளியூர் நகர செயலாளர் ராமகுட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. பேயாக நடிக்கும் அஞ்சலி, யோகிபாபு
பூச்சாண்டி என்ற படத்தில் அஞ்சலி, யோகிபாபு பேயாக நடித்து வருகிறார்கள்.
2. திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
3. வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி
வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி.
4. கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அஞ்சலி
கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடைபெற்றது. அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
5. தூத்துக்குடியில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
நாடு முழுவதும் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, தூத்துக்குடியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுத்தூணில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.