காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகளை அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகளை அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2020 5:45 AM IST (Updated: 2 Oct 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகளை அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.23.69 கோடியில் காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளக்கரை எதிரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர், நேற்று காஞ்சீபுரம் வந்தார். பின்னர் ஏகம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார். அப்போது காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகா தேவி, கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், ஆ.குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அருகே ரூ.4 கோடியில் ராமானுஜர் மணிமண்டபம் கட்டும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

Next Story