ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 42 பேர் கைது
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ராகுல்காந்தி தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று மாலை காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அசேன், வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், ராணிப்பேட்டை நகர தலைவர் வக்கீல் அண்ணாதுரை, மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் நாகேஷ் உள்ளிட்ட 27 பேரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி பஸ் நிலையத்தில், மாநில காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம்பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பஸ்களை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியனர்.
இதையடுத்து வாணியம்பாடி போலீசார் 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், இதனைத் தொடர்ந்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பேரணாம்பட்டு நான்கு கம்பம் பகுதியில் நேற்று இரவு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகர நிர்வாகிகள் ரஜினிகாந்த், ராஜேந்திரன், மனோகரன், சுப்பிரமணி, ஜாகிர் உசேன், ராம்குமார், சோனி நாயக், தினேஷ், பூமிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரக்கோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஜி.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கிஷோர்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நரேஷ், மாநில மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story