திருச்சி அருகே சீராத்தோப்பில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா அஞ்சலி
திருச்சி அருகே சீராத்தோப்பில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி,
இந்து முன்னணி நிறுவன தலைவராக இருந்தவர் ராம கோபாலன். 94 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராம கோபாலன் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ராமகோபாலன் உடல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவரது உடல் இரவோடு, இரவாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி அருகே குழுமணிக்கு செல்லும் சாலையில் சீராத்தோப்பு என்ற இடத்தில் உள்ள பாரத பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
நேற்று காலை ராம கோபாலன் உடல் இந்த வளாகத்திற்கு வந்து சேர்ந்ததும் இறுதி காரியத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்ததால், ராம கோபாலனின் உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி பாலிதீன் கவரால் சுற்றப்பட்டிருந்தது.
முகம் மட்டும் தெரியும்படி ஏற்பாடு செய்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைத்திருந்தார்கள். முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் கேசவராம் மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்பை சேர்ந்தவர்கள் ராம கோபாலன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து முன்னணி தொண்டர்கள் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அவர்கள் ராம கோபாலன் உடல் அருகே நின்று கைகளை நீட்டி அவரது கனவு நிறைவேற பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
அடக்கம் செய்யப்பட்டது
பின்னர், கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் அணிந்த இந்து முன்னணி தொண்டர்கள் 4 பேர், அவரது உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்து சென்றனர். ராம கோபாலனை கடந்த, 15 ஆண்டுகளாக உடனிருந்து கவனித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த பத்மநாபன் இறுதிச் சடங்குகளை செய்தார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட புனிதநீர் ராம கோபாலனின் உடலில் ஊற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உப்பு, மஞ்சள், பூ, பழங்கள் போட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி குழுமணி சாலை மற்றும் குருகுலம் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமகோபாலன் மறைவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் புரட்சிமணி, விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் கோபாலரத்தினம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story