பகலில் மைதானம், இரவில் சமூக விரோதிகளின் கூடாரம்: சேத்துப்பட்டில் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழிக்கும் குடியிருப்புவாசிகள்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள விளையாட்டு மைதானம் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளையும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் கழித்து வருகிறார்கள். மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. இந்த மைதானத்தையொட்டி மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி பூங்கா இருக்கிறது. இந்த மைதானத்தின் பின்புறம் விவேகானந்தர் தெரு உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்கள் வீடுகள் அமைந்து உள்ளது.
சிறுவர்கள், இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் திறக்கப்பட்ட இந்த மைதானம், காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. பகலில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இரவில் கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் என சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. மதுபிரியர்களின் மதுபான கூடாரமாகவும் செயல்படுகிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. மதுபாட்டில்கள் சுக்குநூறாக உடைக்கப்பட்டு பாதசாரிகளின் கால்களை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் சிதறி கிடக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி கூறியதாவது:-
இந்த மைதானம் எங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்காக திறக்கப்பட்டாலும், பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து செல்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும்போது பந்தை தூக்கி வீட்டுக்குள் அடித்துவிடுகிறார்கள். விளையாடுபவர்கள் யாரும் முககவசம் அணிவது இல்லை.
கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் வெளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பந்தை கேட்டு வரும் நபர்களை அனுமதிக்கவில்லை என்றால், வீட்டுக்குள் கற்களை வீசி எறிகிறார்கள். அழகிற்காக வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள செடி, கொடிகளை சேதப்படுத்துகிறார்கள். குப்பைகளை தீவைத்து எரித்துவிட்டு செல்கிறார்கள். இதனால் சுவாச கோளாறு பிரச்சினை ஏற்படுகிறது.
ரவுடிகள் போன்று அவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளது. நாங்கள் அவர்கள் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் அடிக்கும் பந்து வீட்டுக்குள் வராமல் இருக்கவேண்டும். எனவே மைதானத்தை சுற்றிலும் மாநகராட்சி நிர்வாகம் வலைகள் அமைத்தால், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
பகலில் இந்த பிரச்சினை என்றால், இரவில் போதை கும்பல் அட்டூழியம் தாங்க முடியவில்லை. சட்டவிரோத செயல்கள் அனைத்தும் அரங்கேறுகின்றன. குடிபோதையில் வீட்டுக்குள் மதுபாட்டில்களை வீசி எறிவது, சாலைகளில் மதுபாட்டில்களை உடைப்பது, சத்தம் போட்டு ரகளையில் ஈடுபடுவது என்று அவர்களால் சொல்லொணாத் துயரம் ஏற்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த சாலையை பயன்படுத்தவே அச்சமாக இருக்கிறது.
இதுதொடர்பாக சேத்துப்பட்டு போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை. மைதானத்தையொட்டி போலீஸ் ‘பூத்’ இருக்கிறது. 500 மீட்டருக்குள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையம் உள்ளது. எனினும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினையில் போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story