லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் டீச்சர்ஸ் காலனி வீனஸ் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரபாபு (வயது 60). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ரெட்டேரியில் இருந்து கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 100 அடி சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ராஜேந்திரபாபு மீது மற்றொரு லாரி ஏறி இறங்கியது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய ராஜேந்திரபாபு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அரி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்கொந்தளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல்(37) மற்றும் சோழவரத்தை அடுத்த சிருணியம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (37) இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story