அரியலூரில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று பெரம்பலூரில் 11 பேர் பாதிப்பு
அரியலூரில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், அரியலூர் நகராட்சி பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,851 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,059 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 417 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இதேபோல் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேரும், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 3 பேரும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,749 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 310 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story