அந்தியூர் தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி நர்ஸ் சாவு
அந்தியூர் தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி நர்ஸ் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் விஜயகுமாரி (வயது 26). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார்.
இதனால் தினமும் காலையில் மருத்துவமனையை திறந்து பணிகளை கவனிப்பார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் டாக்டர் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை பூட்டி கிடந்தது. இதனால் டாக்டர், நர்ஸ் விஜயகுமாரிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இறந்து கிடந்தார்
இதனால் சந்தேகம் அடைந்து, விஜயகுமாரி தங்கியிருக்கும் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் டாக்டர் கதவை தட்டினார். ஆனால் வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு குளியலறையில் விஜயகுமாரி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடனே இதுபற்றி அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி சாவு
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ‘குளிப்பதற்காக குளியலறைக்கு சென்ற விஜயகுமாரி ஹீட்டரின் பிளக்கை சுவிட்சு போர்டில் சொருகிவிட்டு சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவிட்ச்சில் இருந்து அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய நிலையில் விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ஊட்டியில் இருந்து விஜயகுமாரியின் பெற்றோர் அந்தியூருக்கு விரைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Related Tags :
Next Story