பண்ருட்டி அருகே வீடு புகுந்து மாமியாரை கற்பழித்த மருமகன் - போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
பண்ருட்டி அருகே வீடு புகுந்து மாமியாரை மருமகன் கற்பழித்தார். பின்னர் போலீசுக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 39). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவரை இழந்த ஜானகிராமனின் மாமியார், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமலே அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். இதை பார்த்த ஜானகிராமன், அவரது வீட்டுக்குள் நைசாக நுழைந்து அங்குள்ள ஒரு அறையில் பதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் இயற்கை உபாதை கழித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவரது மாமியார் கதவை பூட்டி விட்டு, தூங்க சென்றார். அந்த சமயத்தில் ஜானகிராமன், தனது மாமியாரை கற்பழிக்க முயன்றார். இதில் திடுக்கிட்ட அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். உடனே ஜானகிராமன், தனது மாமியாரை தாக்கி, வாயை பொத்தி அவரை கற்பழித்து விட்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே காயமடைந்த ஜானகிராமனின் மாமியாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை தேடி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த ஜானகிராமன் பயந்து விட்டார். எப்படியும் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அச்சமடைந்த அவர் ஒதியடிக்குப்பம் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தூக்கில் தொங்கிய ஜானகிராமனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story