பரமத்திவேலூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு


பரமத்திவேலூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 11:25 AM IST (Updated: 5 Oct 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம்.-ல் நேற்று திடீரென அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் தனியார் வங்கிக்கும், பரமத்திவேலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற வங்கி ஊழியர்கள் மற்றும் போலீசார் அலாரத்தை நிறுத்தினர். மேலும் அலாரம் ஒலித்தது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம். மையத்தின் அருகே குப்பை சேகரித்து வைக்கப்பட்டிருந்ததும், நேற்று குப்பைக்கு தீ வைத்ததில் அதில் இருந்து ஏற்பட்ட புகை மூட்டம் ஏ.டி.எம். மையம் வரை சென்றது.

அப்போது ஏ.டி.எம். மையத்தின் கதவு திறந்திருந்ததால் புகைமூட்டம் உள்ளே புகுந்து சென்சார் கருவிகள் மீது பட்டதால் திடீர் என அலாரம் ஒலித்தது தெரியவந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் போலீசார் குப்பைகளை கொட்டி தீ வைக்ககூடாது என அறிவுரை வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story