அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், நெல்லை மண்டல செயலாளர் இன்னாசிமுத்து, தலைமை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story