கட்ரஜ் நெடுஞ்சாலையில் 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
கட்ரஜ் நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
புனே,
புனே அருகே கட்ரஜ் நெடுஞ்சாலையில் நாவ்லே மேம்பாலத்தில் நேற்று காலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
6 பேர் படுகாயம்
இது பற்றி தகவல் அறிந்த பாரதி வித்யாபேட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story