மராட்டியத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை மந்திரி உதய் சாமந்த் பேட்டி


மராட்டியத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை மந்திரி உதய் சாமந்த் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2020 2:24 AM IST (Updated: 7 Oct 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை என்று மந்திரி உதய் சாமந்த் கூறினார்.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி உள்ளது. ஆனாலும் பொருளாதார முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர படிப்படியாக பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பள்ளி, கல்லூரிகள் தொடந்து மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் பாடங்களையும், பரீட்சைகளையும் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது.

ஆய்வு கூட்டம்

இந்தநிலையில் நேற்று புனேயில் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் உயர் கல்வி மந்திரி உதய் சாமந்த் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மந்திரி உதய் சாமந்த் பதிலளித்து கூறியதாவது:-

உகந்த சூழல் இல்லை

மராட்டியம் கொரோனா பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே மாணவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து பாடம் நடத்த தற்போது உகந்த சூழ்நிலை நிலவவில்லை. எனவே மாணவர்களிடம் இருந்து மேம்பாட்டு கட்டணத்தை பெறவேண்டாம் என்று கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story