விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தை கண்டித்து புதுவை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தை கண்டித்து புதுவை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., அமைப்பு செயலாளர் அமுதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரவிக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவேண்டும்.
உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் நாட்டிலேயே அந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு பெண்கள், தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. ரவுடி ராஜ்யம் நடக்கிறது. 356 சட்டப்பிரிவினை பயன்படுத்தி உத்தரபிரதேச அரசை ஜனாதிபதி கலைக்கவேண்டும். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறினார்.

Related Tags :
Next Story