அரும்பார்த்தபுரம் மேம்பாலம் இன்று திறப்பு மத்திய மந்திரி நிதின்கட்காரி காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்
புதுவை அரும்பார்த்த புரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மத்திய மந்திரி நிதின்கட்காரி காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.
புதுச்சேரி,
புதுவை அரும்பார்த்தபுரத்தில் தண்டவாள பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த மல்லிகார்ஜூன கார்கே அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து தண்டவாள பகுதியில் மட்டும் ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் அதை இணைக்கும் விதமாக மேம்பாலம் கட்டப்படாமல் இருந்தது. அதற்கு 2013-ம் ஆண்டு அப்போது மத்திய மந்திரியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். அதன்பின் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது.
காணொலி காட்சி மூலம்...
ஆனால் இந்த பாலம் கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. பாலம் கட்டப்படும் பகுதியில் நிலம் வைத்திருந்தவர்கள் இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கு சென்றதால் தொய்வுகள் ஏற்பட்டன. அதன்பின் அரசின் தொடர் முயற்சியால் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து தற்போது பணிகள் முடிந்துள்ளன.
ரூ.35 கோடியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று (புதன் கிழமை) நண்பகல் 12.30 மணிக்கு நடக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி காணொலி காட்சி மூலம் இந்த பாலத்தை திறந்துவைத்து நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
விழாவில் இணை மந்திரி விஜய்குமார் சிங், கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Related Tags :
Next Story