மாவட்ட செய்திகள்

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி சாவு + "||" + 2 workers involved in road construction were electrocuted to death

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி சாவு

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி சாவு
லாரியில் மின்சார வயர் உரசியதால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
பூந்தமல்லி,

மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்மா நகரில் இருந்து நெல்லிமா நகர் செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சாலையை தோண்டி கற்களை கொட்டி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 8 கூலித்தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர்.


அப்போது லாரியில் வந்த ஜல்லி கற்களை சாலையில் கொட்டி சரி செய்து வந்தனர். அப்போது லாரியின் மேலே சென்ற மின்கம்பியில் லாரியின் மேல்பாகம் உரசியது. இதில் காஞ்சீபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் கன்னியப்பன், பச்சையப்பன் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சாவு

உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த கன்னியப்பன், பச்சையப்பன் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் மின்கம்பிகள் அனைத்தும் தாழ்வாக இருப்பதாகவும், இது போன்று மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து சாவு
பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
2. புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து சாவு
பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
3. மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
மானூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. அசாம் விபத்தில் மரணம் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் நடந்தது
அசாமில் நடைபெற்ற விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
5. அசாம் விபத்தில் மரணம் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் நடந்தது
அசாமில் நடைபெற்ற விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை