சங்கரன்கோவிலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவிலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2020 11:49 PM GMT (Updated: 6 Oct 2020 11:49 PM GMT)

அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை தென்காசிக்கு மாற்றாமல் தொடர்ந்து சங்கரன்கோவிலில் செயல்பட வேண்டும். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் தங்கவேலு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் குருசாமி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் பீர்மைதீன், காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பசீர்ஒலி, த.மு.மு.க., ம.ம.க. நகர தலைவர் இமாம்காசிம், மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கவேலு உள்பட 100 பேர் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story