மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 32 பேர் பாதிப்பு பெரம்பலூரில் 8 பேருக்கு தொற்று + "||" + In Ariyalur The old man kills Corona A further 32 people were affected Infection in 8 people in Perambalur

அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 32 பேர் பாதிப்பு பெரம்பலூரில் 8 பேருக்கு தொற்று

அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 32 பேர் பாதிப்பு பெரம்பலூரில் 8 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூரில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும் உள்பட மொத்தம் 32 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,955 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 3,109 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 77 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. நேற்று மொத்தம் 936 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 57 ஆயிரத்து 921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணம் அடைந்த ஆயிரத்து 808 பேர் சிகிச்சைக்கு பிறகு வெவ்வேறு தினங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 90 பேர் பல்வேறு ஊர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற அறைகளில் குடியேறிய நாய்கள்; அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன. அந்த கட்டிடத்தில் அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2. அரியலூரில் செட்டி ஏரிக்கான வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா?
அரியலூரில் உள்ள செட்டி ஏரிக்கான நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.