அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் திறப்பு
அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம் பாலத்தை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி நிதின்கட்காரி திறந்து வைத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட்டில் அடிக்கடி போக்கு வரத்து தடைபட்டு பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வந்தனர். ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் தண்டவாளத் தின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதை ஏற்று கடந்த 2013-ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை மூலம் ரூ.35 கோடியில் பாலம் கட்டுவது என அறிவிப்பு வெளியானது. அந்த ஆண்டே செப்டம்பர் மாதம் பாலம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கின.
ரெயில்வே கிராசிங் பகுதியில் ரூ.5 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட்டது. இதன்பின் பாலத்தை இணைப்பதற்கான பணிகளை தொடங்கியபோது அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை எழுந்தது. இதனால் பாலம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
திறப்பு விழா
அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் இணைப்பு பாலம் கட்டுவதற் கான பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது 9 மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடித்து பாலத்தை திறப்பது என தெரிவிக்கப் பட்டது. ஆனாலும் பல்வேறு பிரச்சினைகளால் பணிகள் நிறைவடையாமல் தாமதமாகி வந்தன.
சுமார் 7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த அரும்பார்த்தபுரம் பாலம் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்து இருந்தது. சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. டெல்லியில் இருந்தபடியே மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கலந்துகொண்டவர்கள்
விழாவுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயண சாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய இணை மந்திரி விஜயகுமார் சிங், கவர் னர் கிரண்பெடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்கள். விழா வில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுல கிருஷ்ணன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், தீப்பாய்ந்தான், விஜய வேணி, ஜான்குமார், வெங்க டேசன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், பொதுப் பணித்துறை செயலாளர் சுர்பீர் சிங், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய உறுப்பினர் ஆர்.கே.பாண்டே, புதுவை தலைமை பொறி யாளர் மகாலிங்கம், மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி ரணன் விஜய் சிங், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரி பவண் குமார், புதுவை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறி யாளர் சேகர், செயற் பொறியாளர்கள் ராஜசேகரன், வீரசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அரும்பார்த்தபுரம் மேம் பாலம் திறக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்கள் கூறு கையில், ‘புதுச்சேரி- விழுப் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி குறையும். அத் துடன் பயண நேரமும் வெகு வாக குறையும். எரிபொருள் மிச்சமாகும். ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன நெரிசல் ஏற்படுவதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story