பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பணிநீக்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பணிநீக்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2020 4:01 AM IST (Updated: 8 Oct 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

பணி வழங்கக்கோரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்ட 2 ஆயிரத்து 612 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் அவர்கள் பணி வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர்களான தெய்வீகன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்கள். மக்கள் வாழ்வுரிமை இயக்க ஜெகநாதன், திராவிடர் விடுதலை கழக லோகு.அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக இளங்கோ, புதுச்சேரி தன்னுரிமை கழக சடகோபன், தமிழர் களம் அழகர், அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

Next Story