இந்திரா-ராஜீவ்காந்தி சதுக்கத்தில் மேம்பாலம் மத்திய மந்திரி நிதின்கட்காரி உறுதி


இந்திரா-ராஜீவ்காந்தி சதுக்கத்தில் மேம்பாலம் மத்திய மந்திரி நிதின்கட்காரி உறுதி
x
தினத்தந்தி 7 Oct 2020 10:46 PM GMT (Updated: 7 Oct 2020 10:46 PM GMT)

இந்திராகாந்தி -ராஜீவ்காந்தி சதுக்கங் களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

இந்த பாலம் கட்டியது ஒரு பெரிய சாதனை. இது காலதாமதமாக திறக்கப்பட்டதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பாலம் 20 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தடைப்பட்ட வேலைகளை பின்தொடர்கிறார். விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலை 287 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகள் ரூ.10 ஆயிரத்து 819 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக பகுதி பகுதியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம்-புதுச்சேரி பகுதியில் 29 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,249 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

இந்திரா-ராஜீவ்காந்தி சதுக்கம்

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 கோடியில் நோணாங்குப்பம் படகு இல்லத்தில் நடைபாதை அமைக்கும் பணியையும் மேற்கொள்வோம். அரியூர் முதல் புதுச்சேரி வரை சாலை மேம்படுத்தப்படவும் உள்ளது. சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க உள்ளோம்.

புதுவை, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 4 வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி உதவிடவேண்டும்.

நீர்வழி போக்குவரத்து

தரைவழிப்போக்குவரத்துபோல் நீர் வழி போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் தருவது அவசியமாகும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த சேவையை தொடங்கலாம். இதில் தனியார் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். அதற்கான பணியையும் தொடங்கவேண்டும்.

புதுவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் கிரண்பெடி

ரெயில்வே மேம்பால திறப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பெடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த பகுதியில் ரெயில்வே கேட் ஒரு நாளைக்கு 16 முறை மூடப்பட்டு திறக்கப்படும். இனி மக்கள் மேம்பாலம் வழியாக செல்ல முடியும். இந்த திட்டம் பலருடைய நேரத்தை சேமித்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு காரணங்களால் பாலத்தை கட்டி முடிக்க காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு கூடுதல் பணம் செலவாகும் நிலை ஏற்பட்டது. வழக்குகள், நில இழப்பீடு கட்டணங்களும் நிலுவையில் இருந்தன. தாமதங்களை தவிர்ப்பதற்காக ஒரு தற்செயல் நிதியாக கூடுதல் செலவுகளை ஈடுகட்ட இந்திய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம்

விழாவில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

நீண்ட கால முயற்சிக்குப்பின் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் தொடர்பாக பலவிதமான விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் திட்டத்தை கொண்டு வந்தோம்.

இதுபோன்ற திட்டங்களுக்கு மாநில அரசு 20 சதவீத நிதி வழங்கவேண்டும். ஆனால் அந்த நிதியை வழங்க முடியாத நிலை இருந்ததால் நானும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கோரிக்கை வைத்ததை ஏற்று அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ரூ.130 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. புதுவையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ராஜீவ்காந்தி, இந்திரகாந்தி சதுக்கம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும். காரைக்காலில் சாலைகளை மேம்படுத்தவும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story