பாளையங்கோட்டையில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
பாளையங்கோட்டையில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்.
நெல்லை,
உத்திரபிரதேசத்தில் தலித் பெண் படுகொலைக்கு காரணமான மாநில அரசை உடனடியாக கலைக்க வேண்டும். இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை த.மு.மு.க., ம.ம.க. அலுவலகத்தில் இணையதளம் மூலம் போராட்டம் நடந்தது.
மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜமீன், துணை செயலாளர் சம்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அலிப்பிலால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார். இந்த போராட்டத்தில் சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் முகம்மது அப்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story