மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public siege of the Assistant Collector's Office at Kovilpatti

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீனிவாச நகரில் குடியிருப்பு மற்றும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்தது.


அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய காரணத்தாலும், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து நிர்வாகம் தீர்மானத்தின் மூலம் செல்போன் கோபுரம் அமைக்க தடை செய்ததாலும் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் இருந்தது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் மீண்டும் பணிகளை தொடங்க இருப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு, மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சீனிவாசன் நகர் செல்போன் கோபுரம் எதிர்ப்பு குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீனிவாச நகர் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

அதனை தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலக உதவியாளர் நிஷாந்தினியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது
பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
2. கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி
கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. மாமல்லபுரத்தில் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாமல்லபுரம் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை ரூ.52 உயர்வு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.52 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 2-வது முறையாக விலை ஏற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள், பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.