மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்


மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்
x
தினத்தந்தி 9 Oct 2020 3:03 AM IST (Updated: 9 Oct 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்.

தானே,

பழம்பெரும் மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர். இவர் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

68 வயதான அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காலை 10.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவினாஷ் கார்ஷிகர் 1978-ம் ஆண்டு மராட்டிய திரைப்பட உலகில் ‘பாந்தி மி யா சன்சாரி’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படங்களில் சவுசான்சி அஷி தஷி, அப்ராமிச் கேலே, வாசுசி சாசு ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. மராட்டிய திரைப்படத்துறையில் நகைச்சுவை நடிப்பால் நன்கு அறியப்பட்ட இவர் மராத்தி பட நடிகர்களான அசோக் சாரப், மறைந்த நடிகர் லஷ்மிகாந்த் பெட்ரே போன்ற பிரபலமானவர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.

Next Story