முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் முனிரத்னா சந்திப்பு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்க கோரிக்கை


முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் முனிரத்னா சந்திப்பு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2020 9:58 PM GMT (Updated: 8 Oct 2020 9:58 PM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பாவை முனிரத்னா நேற்று திடீரென்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஆர்.ஆர்.நகர் தொகுதியில் தனக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்), சிரா ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஜனதா தளம்(எஸ்) கட்சியும் சிரா தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த முனிரத்னா மற்றும் அதே தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த துளசி முனிராஜ்கவுடா ஆகியோரின் பெயர்களை கட்சி மேலிடத்திற்கு கர்நாடக பா.ஜனதா அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இதில் முனிரத்னாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அக்கட்சி மேலிடம் இதுவரை வேட்பாளர் பெயர்களை அறிவிக்கவில்லை.

டிக்கெட் கிடைக்கும்

தனக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட் கைதவறி போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் முனிரத்னா இருந்து வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை முனிரத்னா திடீரென்று நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் தனக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு எடியூரப்பா, கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிடும் வரை அமைதி காக்குமாறும், உங்களுக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றும் நம்பிக்கை கூறி அனுப்பி வைத்தார்.

Next Story