விதிமுறைகளை மீறி சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


விதிமுறைகளை மீறி சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 5:06 AM IST (Updated: 9 Oct 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

விதி முறைகளை மீறி சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூரில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கு இருந்து சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் அரசின் விதிமுறைகளை மீறி நிர்ணயித்த அளவை விட கூடுதலாக சவுடு மண் ஏற்றி கொண்டு அதன் மேல் தார்பாய் போடாமல் செல்வதாக புகார்கள் எழுந்தது.

லாரிகள் சிறை பிடிப்பு

இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்ததாக 5 லாரிகளை சிறைபிடித்து அதன் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story