ஆன்லைனில் நவராத்திரி வழிபாடு மண்டல்களுக்கு மாநகராட்சி உத்தரவு


ஆன்லைனில் நவராத்திரி வழிபாடு மண்டல்களுக்கு மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2020 2:35 AM IST (Updated: 10 Oct 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மண்டல்கள் ஆன்லைன் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 17-ந் தேதி முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக மும்பையில் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் தேவி சிலை பிரதிஷ்டை செய்யும் மண்டல்கள் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் வழிபாடுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

4 அடி சிலை

மேலும் மண்டல் பகுதிகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நவராத்திரி கொண்டாட்டம் தொடர்பாக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து இருந்தது. அதில் வீடுகளில் 2 அடி உயரம் வரையிலும், மண்டல்களில் 4 அடி வரையிலும் தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே உத்தரவை மும்பை மாநகராட்சியும் பிறப்பித்து உள்ளது.

Next Story