சிறுவர்களை அரைநிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு


சிறுவர்களை அரைநிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு
x

நாக்பூரில் சிறுவர்களை அரை நிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர்,

நாக்பூர், ஜரிபாட்கா பஸ் நிலையம் அருகே மது பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 22-ந் தேதி இந்த பாருக்குகள் அத்துமீறி நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியதுடன். கத்தி முனையில் மிரட்டி ரூ.7 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளையில் ஈடுபட்டபவர்களின் அடையாளம் தெரியவந்தது.

இதையடுத்து அடுத்த நாளே அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 வயது நபரும், 5 சிறுவர்களும் அடங்குவர்.

விசாரணைக்கு உத்தரவு

இவர்களை போலீசார் அரை நிர்வாணமாக பொதுவெளியில் நடக்கவைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் சிறுவர்களை அரை நிர்வாணமாக நடக்க வைத்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில் ஜரிபாட்கா போலீஸ் நிலைய சீனியர் இன்பெக்டர் மற்றும் சப்-இன்பெக்டர் உள்பட 7 போலீசார் தவறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சிறார் நீதி(குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story