மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகளுக்கு அனுமதி
மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் தற்போது அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களையும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மாநில அரசு மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
டப்பாவாலாக்கள்
இது குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநில அரசு கேட்டு கொண்டதன் பேரில் ரெயில்வே அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகளை மும்பை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி அளித்து உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த புதன்கிழமை முதல் டப்பாவாலாக்கள், வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story