நான் தற்போது யாருக்கும் வேண்டாத சிசு முன்னாள் போலீஸ் அதிகாரி அனுபமா செனாய் கண்ணீர் பேட்டி


நான் தற்போது யாருக்கும் வேண்டாத சிசு முன்னாள் போலீஸ் அதிகாரி அனுபமா செனாய் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2020 3:21 AM IST (Updated: 10 Oct 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

நான் தற்போது யாருக்கும் வேண்டாத சிசு என்று முன்னாள் போலீஸ் அதிகாரி அனுபமா செனாய் கண்ணீர் மல்க கூறினார்.

பல்லாரி,

கர்நாடக போலீஸ் துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் அனுபமா செனாய். சித்தராமையா ஆட்சியில் பணி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பாரதிய ஜனசக்தி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முன்னாள் போலீஸ் அதிகாரியான அவர் பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் பணியில் இருந்தபோது என்னை சட்டவிரோதமாக பணி இடமாற்றம் செய்தனர். இதற்கு எதிராக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். மேலும் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறேன். இதில் முழுமையாக விசாரணை நடந்து எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

வேண்டாத சிசு

சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பது தற்போது புரிந்துள்ளது. நான் தற்போது யாருக்கும் வேண்டாத சிசுவை போல் உள்ளேன். அதற்காக நான் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன். முன்பு எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நினைத்துக் கொண்டு இருக்க மாட்டேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு முன்னேறி செல்வேன்.

இவ்வாறு அனுபமா செனாய் கூறினார்.

இந்த பேட்டியின்போது, அனுபமா செனாய் கண்ணீர் விட்டு அழுதார்.

Next Story