செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 39 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 39 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 Oct 2020 5:00 AM IST (Updated: 11 Oct 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 309 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 15 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 பேர் உள்பட நேற்று 309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 191 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 595 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 316 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 199 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 34 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் இறந்துள்ள நிலையில், 576 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய முதியவர், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண், 27 வயதுடைய ஆண், கரசங்கால் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஆண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண், காரணைத்தாங்கல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆண் உள்பட ஒரே நாளில் 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 22 ஆயிரத்து 179 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பினர். 891 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 344 ஆக உள்ளது.


Next Story