திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 7 பேர் பலி


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2020 4:30 AM IST (Updated: 12 Oct 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று 7 பேர் பலியாகினர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 34 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 583 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 158 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். 23 ஆயிரத்து 563 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 ஆயிரத்து 320 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 347 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 555 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக உயர்ந்தது.


Next Story