பொதுமக்கள் முழு மனதுடன் பங்குபெற்றால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியும் உத்தவ் தாக்கரே பேச்சு


பொதுமக்கள் முழு மனதுடன் பங்குபெற்றால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியும் உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2020 2:45 AM IST (Updated: 12 Oct 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் முழு மனதுடன் பங்குபெற்றால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போாில் வெற்றி பெற முடியும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

நாம் சிறந்த நடவடிக்கை எடுத்த போதும் வெளிநாட்டு விருந்தாளி நம்மைவிட்டு செல்லாமல் உள்ளது. நோய் பாதித்தவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்களாவே உள்ளனர்.

தடுப்பு மருந்து வரும் வரை கொரோனாவுக்கு எதிரான சண்டையில் முககவசமே நமக்கு தற்காப்பு கலையாகவும், பிளாக் பெல்ட்டாகவும் இருக்கும்.

வெற்றி பெற முடியும்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மக்களுக்கு அபராதம் அல்லது கடுமையான சட்டங்கள் கொண்டுவர எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் பொதுமக்கள் முழு மனதுடன் பங்குபெற்றால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும்.

முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமா அல்லது ஊரடங்கில் முடங்கி இருக்க வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டவை மீண்டும் மூடப்பட கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story