கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடி நிதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுவையில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடிக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்த 28 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி அரசின் நகர திட்டமிடுதல் அதிகாரி ஸ்ரீதரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பு, ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம் 90 நாட்களுக்கு நீட்டிப்பு ஆகிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் கிட் 50 ஆயிரம் வாங்க ரூ.2 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு, ட்ரூனெட் முறையிலான கொரோனா பரிசோதனைக்கு தேவையான ட்ரூனெட் சிட் 28 ஆயிரம் வாங்க ரூ.3 கோடியே 66 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பொதுவிடுமுறை
மேலும் பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு மத்திய அரசு நிதி ரூ.2¼ கோடி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ. 76 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆகிய கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு 2021-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 28 கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story