நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை: முக்கிய குற்றவாளி உள்பட 6 பேர் கைது
நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி,
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45), சுப்பையா மனைவி சாந்தி (38). அங்கன்வாடி பணியாளர்களான இவர்கள் 2 பேரும் உறவினர்கள். கடந்த மாதம் 26-ந் தேதி இவர்கள் 2 பேரின் வீடுகளுக்குள்ளும் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதல் திருமணம் செய்த சண்முகத்தாயின் மகன் நம்பிராஜன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம், அவருடைய உறவினர் சுரேஷ் ஆகிய 2 பேரும் கடந்த மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சுப்பையாவின் மகனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் சண்முகத்தாய், சாந்தி ஆகிய 2 பேரை பழிக்குப்பழியாக படுகொலை செய்தது தெரியவந்தது.
மேலும் 6 பேர் கைது
இதுதொடர்பாக செல்லத்துரை உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சண்முகத்தாய், சாந்தி இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக, மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன் (52), அம்பை அருகே மணிமுத்தாறு மலையாளமேடு பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து (55), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முத்துபாண்டி (49) ஆகிய 3 பேர் திருச்சி கோர்ட்டிலும், செல்லத்துரையின் தம்பி சிவசுப்பு (32) கோவை கோர்ட்டிலும், மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த மாடசாமி (40) தென்காசி கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மறுகால்குறிச்சியைச் சேர்ந்த செல்லத்துரை (35), சுப்பிரமணியன் (64), அவருடைய மனைவி வெள்ளத்தாய் (56), ஆறுமுகம் மனைவி மாணிக்கம் (45), ஸ்ரீவைகுண்டம் கீழ கணபதி தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் காசிராம் (22), பிரவீன்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story