திருப்பூரில் காதல் பிரச்சினையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருப்பூரில் காதல் பிரச்சினையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2020 10:00 AM IST (Updated: 12 Oct 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் காதல் பிரச்சினையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

நல்லூர்,

திருப்பூர், விஜயாபுரம், தெற்கு வீதியை சேர்ந்த மாரீஸ்வரன் மகன் வெங்கடேஷ் (வயது 22). சந்திராபுரம் அருகே செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் ஊட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காதலர்கள் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த வெங்கடேஷ் இரவு படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாளிட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் கதவை திறக்க வில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் அழைத்து பார்த்தனர். ஆனால் பதில் வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் படுக்கை அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கில் வெங்கடேஷ் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்தில் வெங்கடேஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story