‘தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க.வுக்கு வரும்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க.வுக்கு வரும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தொடங்கி வைக்கிறார். அப்போது தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணி
தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும். அங்கு ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து கடைபிடிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அதனால் தான் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கியது. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக உள்ளன. அது நிச்சயமாக நடக்கும்.
ஆபாச படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். திரைப்படங்களுக்கான தணிக்கை கட்டுப்பாட்டு வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், திரைப்படங்களில் ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தும். தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த திரைப்படம் வந்தாலும், அதனை தணிக்கை கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவன செய்யும்.
முன்பு அ.தி.மு.க.வுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் முதல்-அமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர். அதேபோன்றுதான் தற்போதும் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டு உள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்று கட்சியினர் இணைந்தனர்
முன்னதாக, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருண்குமார் தலைமையிலான மாற்று கட்சியினர் 30-க்கும் மேற்பட்டவர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, வினோபாஜி, போர்டுசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், துணை செயலாளர் விஜயராஜ், நகர மாணவரணி செயலாளர் விநாயக முருகன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன், ஆவின் இயக்குனர் நீலகண்டன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகம் திறப்பு
பின்னர், கோவில்பட்டி திலகர் நகரில் மனித உரிமை காக்கும் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் சிவன் சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாயக்கண்ணன் வரவேற்றார். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் துர்க்கை லிங்கம், மாவட்ட தலைவர் தவசி பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன், நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story