அபராதம் விதிக்கப்படும் முககவசம் அணியாதவர்களை பிடிக்க தீவிர சோதனை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


அபராதம் விதிக்கப்படும் முககவசம் அணியாதவர்களை பிடிக்க தீவிர சோதனை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2020 2:27 AM IST (Updated: 13 Oct 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் முககவசம் அணியாதவர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மும்பையில் இந்த மாத தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பலர் முக கவசம் அணியாமல் பொதுவெளியில் திரிவதால் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முக கவசம் அணியாமல் பொது வெளியில் திரிபவர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தும்படி மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தினமும் 20 ஆயிரம் பேரை...

முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடிக்க மும்பை மாநகராட்சி மிகப்பெரிய அளவில் சோதனை பணியை மேற்கொள்ள உள்ளது. தினமும் 20 ஆயிரம் பேரை பிடிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த பணி தொடர்ந்து 1 மாதம் நடைபெறும். அதிகம் பேர் முக கவசம் அணிவதில்லை. எனவே தான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனையை தீவிரப்படுத்த உள்ளோம்.

இந்த சோதனை காரணமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக கவசம் அணியாமல் பிடிபடுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி ஏற்கனவே முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story